இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) மண்ணெண்ணெய் விலையை 50 ரூபாவினால் குறைத்துள்ளது
மண்ணெண்ணெய் விலை 50 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு (01) முதல் நடைமுறைக்கு வருவதாக கூட்டுத்தாபனம் அறவித்துள்ளது.
இருப்பினும், ஏனைய பெட்ரோலிய பொருட்களின் விலைகள் மறுசீரமைக்கப்படவில்ல என்று கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
புதிய விலை மறுசீரமைபப்புக்கு அமைவாக ,தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலியப் பொருட்களின் விலை பின்வருமாறு:
மண்ணெண்ணெய் – ரூ. 305.00
92 ஒக்டேன் பெற்றோல் – ரூ. 400.00
95 ஒக்டேன் பெற்றோல் – ரூ. 510.00
லங்கா ஓட்டோ டீசல் – ரூ. 405.00
லங்கா சுப்பர் டீசல் – ரூ. 510.00