Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிப்பு – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு!

October 13, 2026

சாமிமலை கவரவில பாடசாலைக்கு அருகில் கோப்பி தொழிற்சாலை திட்டம்: மாணவர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து மக்கள் கடும் எதிர்ப்பு!

October 13, 2026

தெய்யோவிட்டவில் பேருந்தும் லொரியும் மோதி விபத்து: பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்! ​

October 12, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » 120 பயனாளிகளுக்கு கடல் அட்டை உற்பத்திப் பண்ணைகளுக்கான பரிந்துரைக் கடிதங்கள் வழங்கி வைப்பு*
இலங்கை

120 பயனாளிகளுக்கு கடல் அட்டை உற்பத்திப் பண்ணைகளுக்கான பரிந்துரைக் கடிதங்கள் வழங்கி வைப்பு*

ThanaBy ThanaJuly 20, 2026No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

*120 பயனாளிகளுக்கு கடல் அட்டை உற்பத்திப் பண்ணைகளுக்கான பரிந்துரைக் கடிதங்கள் வழங்கி வைப்பு*

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சின் வழிகாட்டலின் கீழ், தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை (NAQDA) ஏற்பாடு செய்த 1 ஏக்கர் கடல் அட்டை உற்பத்திப் பண்ணைகளுக்கான பரிந்துரைக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு ஊர்காவற்துறை பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பரிந்துரைக் கடிதங்களை வழங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ், 20 உற்பத்தியாளர் குழுக்களைச் சேர்ந்த 120 பயனாளிகளுக்கு (ஒவ்வொரு குழுவிலும் ஆறு உறுப்பினர்கள்) ஆரம்பக்கட்ட தள அனுமதிக்கான பரிந்துரைக் கடிதங்கள் வழங்கப்பட்டன. இதன் மூலம், அவர்கள் கடல் அட்டை வளர்ப்பிற்கான நீரியல் வளர்ப்பு முகாமைத்துவ அனுமதிப்பத்திரத்தை (Aquaculture Management Licence) பெற்றுக்கொண்டு உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான அடுத்த கட்டத்திற்கு முன்னேறவுள்ளனர்.

நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், கடல் அட்டை வளர்ப்பு என்பது கடற்கரை மக்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தையும் வருமானத்தையும் உருவாக்கும் முக்கிய துறையாக இருப்பதுடன், நாட்டின் நீலப் பொருளாதார வளர்ச்சிக்கும் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதாக தெரிவித்தார்.

மேலும், சமூக அடிப்படையிலான நீரியல் வளர்ப்புத் திட்டங்களை விரிவுபடுத்துவதன் மூலம் கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கவும் கடற்றொழில் அமைச்சு தொடர்ந்தும் உறுதியுடன் செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் திரு. கித்சிறி தர்மபிரிய, ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் திருமதி வனஜா செல்வரத்தினம், தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வட மாகாண உதவி பணிப்பாளர் பீ. நிருபராஜ், ஊர்காவற்துறை கடற்றொழில் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், அமைச்சின் மற்றும் NAQDA-வின் அதிகாரிகள், உற்பத்தியாளர் குழுக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

க.கிஷாந்தன்

ஊடக செயலாளர்

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிப்பு – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு!

    October 13, 2026

    தெய்யோவிட்டவில் பேருந்தும் லொரியும் மோதி விபத்து: பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்! ​

    October 12, 2026

    இன்று பிற்பகலுக்குப் பின் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை!

    October 12, 2026

    நாவலப்பிட்டி நகர சபை தலைவர் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது!

    October 12, 2026
    Editors Picks

    நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிப்பு – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு!

    October 13, 2026

    சாமிமலை கவரவில பாடசாலைக்கு அருகில் கோப்பி தொழிற்சாலை திட்டம்: மாணவர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து மக்கள் கடும் எதிர்ப்பு!

    October 13, 2026

    தெய்யோவிட்டவில் பேருந்தும் லொரியும் மோதி விபத்து: பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்! ​

    October 12, 2026

    இன்று பிற்பகலுக்குப் பின் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை!

    October 12, 2026

    நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிப்பு – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு!

    October 13, 2026

    சாமிமலை கவரவில பாடசாலைக்கு அருகில் கோப்பி தொழிற்சாலை திட்டம்: மாணவர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து மக்கள் கடும் எதிர்ப்பு!

    October 13, 2026

    தெய்யோவிட்டவில் பேருந்தும் லொரியும் மோதி விபத்து: பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்! ​

    October 12, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.