Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நீதிமன்றத்தின் சுயாதீனத்தில் தலையிடாதே: மொனராகலையில் ஐக்கிய மக்கள் சக்தியினால் கையெழுத்துப் போராட்டம் ஆரம்பம்!

July 21, 2026

பரபரப்பான ஹட்டன் நகர்: அனுமதியற்ற கடைகளை அகற்றச் சென்ற அதிகாரிகளுக்குக் கடும் எதிர்ப்பு!

July 21, 2026

2025 ஆம் ஆண்டுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகின

July 21, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » உலக சாரணர் இயக்கத்தின் (WOSM) ஆசிய-பசுபிக் பிராந்திய (APR) பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம்
இலங்கை

உலக சாரணர் இயக்கத்தின் (WOSM) ஆசிய-பசுபிக் பிராந்திய (APR) பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம்

ThanaBy ThanaJuly 20, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

உலக சாரணர் இயக்கத்தின் (WOSM) ஆசிய-பசுபிக் பிராந்திய (APR) பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள உலக சாரணர் இயக்கத்தின் (WOSM) ஆசிய-பசுபிக் பிராந்திய (APR) சாரணர் குழுவின் தலைவர் கலாநிதி எம். சின் பின் பிடின் உள்ளிட்ட உயர் மட்டப் பிரதிநிதிகள் குழுவிற்கும், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகேவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (18) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

பிராந்திய சாரணர் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இப்பிரதிநிதிகள் குழுவுடன், இலங்கையின் சாரணர் இயக்கத்தின் தொடர்ச்சியான அபிவிருத்தி மற்றும் அதனை கிராமிய மட்டம் வரை மேலும் விரிவுபடுத்தும் வேலைத்திட்டங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

போதைப்பொருள் ஒழிப்புக்காக நடைமுறைப்படுத்தப்படும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்திற்கு, வெளிநாட்டு அனுபவங்கள் மற்றும் வெற்றிகரமான நடைமுறைகளைப் பகிர்ந்துகொண்டு, சாரணர் இயக்கத்தின் முழுமையான ஆதரவை வழங்குவதாகவும், அதற்கான திட்டங்களை எதிர்காலத்தில் சமர்ப்பிப்பதாகவும் ஆசிய-பசுபிக் பிராந்திய பிரதிநிதிகள் குழு இங்கு உறுதியளித்தது.

மேலும், 2027 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆசிய-பசுபிக் சாரணர் ஜம்போரியை இலங்கையில் நடத்துவது குறித்தும், அதற்கு அரசாங்கத்தின் ஆதரவை வழங்குவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கை சாரணர் சங்கத்தின் தலைவர் ரன்சிரி பெரேரா, பிரதம ஆணையாளர் சட்டத்தரணி மனோஜ் நாநாயக்கார, உலக சாரணர் இயக்கத்தின் ஆசிய-பசுபிக் பிராந்திய சாரணர் குழுவின் உப தலைவர் தேவ் ராஜ் கிமிரே, ஆலோசகர் Wendel E. Avisado, இலங்கை சாரணர் சங்கத்தின் பிரதி பிரதம ஆணையாளர் கபில பெரேரா, குழுத் தலைவர் கமல்நாத் ஜினதாச, சர்வதேச ஆணையாளர் வைத்தியர் அசங்க எரியாவ, உதவிப் பிரதம ஆணையாளர் பிரபாத் குலரத்ன உள்ளிட்ட ஆசிய-பசுபிக் பிராந்திய சாரணர் குழுவின் பிராந்திய பணிப்பாளர்கள், ஆலோசகர்கள் மற்றும் இலங்கை சாரணர் சங்கத்தின் சிரேஷ்ட பிரதிநிதிகள் குழுவினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நீதிமன்றத்தின் சுயாதீனத்தில் தலையிடாதே: மொனராகலையில் ஐக்கிய மக்கள் சக்தியினால் கையெழுத்துப் போராட்டம் ஆரம்பம்!

    July 21, 2026

    2025 ஆம் ஆண்டுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகின

    July 21, 2026

    மாகாண சபை, உள்ளூராட்சித் தேர்தல்களில் மாற்றம்! பெண்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிப்பு?

    July 21, 2026

    மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வை வலியுறுத்திய எல்.பி.எல். ‘பிங்க் மெட்ச்’

    July 21, 2026
    Editors Picks

    நீதிமன்றத்தின் சுயாதீனத்தில் தலையிடாதே: மொனராகலையில் ஐக்கிய மக்கள் சக்தியினால் கையெழுத்துப் போராட்டம் ஆரம்பம்!

    July 21, 2026

    பரபரப்பான ஹட்டன் நகர்: அனுமதியற்ற கடைகளை அகற்றச் சென்ற அதிகாரிகளுக்குக் கடும் எதிர்ப்பு!

    July 21, 2026

    2025 ஆம் ஆண்டுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகின

    July 21, 2026

    மாகாண சபை, உள்ளூராட்சித் தேர்தல்களில் மாற்றம்! பெண்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிப்பு?

    July 21, 2026

    நீதிமன்றத்தின் சுயாதீனத்தில் தலையிடாதே: மொனராகலையில் ஐக்கிய மக்கள் சக்தியினால் கையெழுத்துப் போராட்டம் ஆரம்பம்!

    July 21, 2026

    பரபரப்பான ஹட்டன் நகர்: அனுமதியற்ற கடைகளை அகற்றச் சென்ற அதிகாரிகளுக்குக் கடும் எதிர்ப்பு!

    July 21, 2026

    2025 ஆம் ஆண்டுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகின

    July 21, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.