மேலைத்தேய நாடுகளில் பகவத் கீதையின் செல்வாக்கு
பகவத் கீதை என்பது உலகளாவிய ரீதியில் தத்துவக் கோட்பாடாகவும் மற்றும் ஒழுக்க, ஆன்மீக வளர்ச்சிக்கான ஒரு நூலாகவும் அமைகின்றது. அது ஆத்மாவின் ஞானத்தைப் பகிர்ந்தளித்து, இரண்டு உலகளாவிய கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது.
நான் யார்?;, இருமைகளும,; குழப்பங்களும் நிறைந்த இந்த உலகில் நான் எப்படி மகிழ்ச்சியான மற்றும் அமைதியான வாழ்க்கையை வாழ முடியும்? என்ற கேள்விகளுக்கு பதிலலிக்கின்றது. வாழ்க்கைப் போருக்கு நம்மை எவ்வாறு தயார்படுத்திக் கொள்வது என்பதை பகவத் கீதை நமக்குக் கற்பிக்கிறது
. நம்பிக்கையுடன் மீண்டும் மீண்டும் படிப்பது நமது மனதைத் தூய்மைப்படுத்தி, நவீன வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள நமக்கு வழிகாட்டி, அக அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் வழிவகுக்கிறது. கீதை, உபநிடதங்கள் மற்றும் வேதாந்தத்தின் சாரத்தை அடிப்படையாகக் கொண்ட ஆத்மஞானம் எனும் ஆன்மீக அறிவியலைக் கற்பிக்கிறது. இது அனைத்து மனிதர்களுக்கும் ஆன்மீக முன்னேற்றத்தையும், பரம்பொருளுடன் எவ்வாறு ஒன்றிப்போவது என்பதையும் உறுதி செய்கிறது. அதன் போதனைகள் ஆழமானவை மற்றும் உன்னதமானவை ஆகும்.
பகவத் கீதை மனிதகுலம் அறிந்த மிக முக்கியமான இதிகாசமான மகாபாரதத்திலிருந்து உருவான, 700 சுலோகங்களைக் கொண்ட ஒரு பண்டைய இந்திய நூலாகும். இந்தியாவில், பகவத் கீதை மிகவும் மதிக்கப்படுகிறது, மேலும் பல நூற்றாண்டுகளாக ஒரு வழிகாட்டும் ஒளியாக இருந்து வருகிறது. கிழக்கத்திய நாடுகளில் உள்ள பலர், தங்கள் அன்றாட வாழ்விலும் ஆன்மீகப் பயணங்களிலும் வழிகாட்டுதலுக்காக அதன் போதனைகளை நாடுகின்றனர். இது தத்துவம், கலை மற்றும் கலாச்சாரம் உட்பட வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் செல்வாக்கு செலுத்தி, கிழக்கத்திய வாழ்க்கை முறையின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக மாறியுள்ளது.
மேற்கத்திய உலகில், குறிப்பாக சமீப காலங்களில், பகவத்கீதை ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் வெவ்வேறு கலாச்சாரங்கள் மற்றும் ஆன்மீகப் பாதைகள் குறித்து அதிக ஆர்வம் கொள்ளும்போது, அவர்கள் கீதையின் ஞானத்தைக் கண்டறிந்துள்ளனர். அது சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் தலைவர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது. மேலும், அதன் காலத்தால் அழியாத போதனைகள், மேற்கத்திய நாடுகளில் அக அமைதியையும் அர்த்தத்தையும் தேடும் தனிநபர்களிடையே தொடர்ந்து எதிரொலித்து வருகின்றன எனலாம்.
மேலை நாட்டு அறிஞர்கள் தங்களது வாழ்கையோடு இணைந்தாக கீiயினை முக்கியத்துவபடுத்தியுள்ளனர். அந்தவகையில் ராபர்ட் ஓப்பன்ஹைமர் அதாவது அணுகுண்டின் தந்தை என்று போற்றப்படும் இவர் இரண்டாம் உலகப் போரின் போது, ஒரு அதி ரகசியத் திட்டத்தில் பணிபுரியும் விஞ்ஞானியாக அந்தக் காலகட்டத்தில் செயற்பட்ட இவருக்கு வழிகாட்டுதலுக்காக, ஒரு பண்டைய இந்திய நூலான பகவத் கீதையை நாடினார். கீதையின் செய்தியால் மிகவும் ஈர்க்கப்பட்டு, அந்த முதல் குண்டு சோதனைக்குப் பிறகு அதையே மேற்கோள் காட்டினார். அவர், ‘இப்போது நான் மரணம், உலகங்களை அழிப்பவன் என்று கூறினார். கீதையின் ஆன்மீகக் கருத்துக்கள் அவரை எந்த அளவிற்கு ஆழமாகத் தொட்டன என்பதை இது காட்டுகிறது.
அறிஞர் ஹென்றி டேவிட் தோரோ மனதில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்திய புத்தகங்களில் ஒன்று பகவத் கீதை. கீதையில், அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்வது மற்றும் ஒருவரின் அகமனதைப் புரிந்துகொள்வது குறித்த ஞானத்தை தோரோ கண்டறிந்தார். அது, திட்டமிட்டு வாழ்வதிலும், இயற்கையோடு இயைந்த எளிய வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பதிலும் அவருக்கு இருந்த நம்பிக்கையை வலுப்படுத்தியது.
மேலும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (விஞ்ஞானி) இற்கு தத்துவம் மற்றும் ஆன்மீகத்தின் மீதும் ஆழ்ந்த மதிப்பு இருந்தது. ஒரு அறிவியல் அறிஞரான ஐன்ஸ்டீன், பகவத் கீதையில் ஒரு சிறப்பான விஷயத்தைக் கண்டறிந்தார். இந்தப் பண்டைய இந்திய நூல் கணிதம் அல்லது இயற்பியலைப் பற்றியது அல்ல, மாறாக வாழ்க்கையின் ஆழமான அர்த்தத்தையும் யதார்த்தத்தின் இயல்பையும் பற்றியது. பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றிற்கும் அடிப்படையாக விளங்கும், மாறாத பிரபஞ்சப் பிரக்ஞை பற்றிய கீதையின் கருத்தால் ஐன்ஸ்டீன் ஈர்க்கப்பட்டார். இந்த ஆன்மீகக் கருத்துக்களுக்கும், தனது அறிவியல் பணிகளின் மூலம் அவர் அவிழ்த்துக்கொண்டிருந்த பௌதிக உலகின் மர்மங்களுக்கும் இடையே ஒரு தொடர்பை அவர் கண்டார்.
தொடர்ந்து புகழ்பெற்ற எழுத்தாளரான ஆல்டஸ் ஹக்ஸ்லி , பகவத் கீதை உட்பட கீழைத்தேய ஆன்மீகத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். உணர்வின் கதவுகள் என்ற நூலில் விவரிக்கப்பட்டுள்ள, உணர்வுநிலையின் மாற்றங்கள் குறித்த அவரது ஆய்வானது, யதார்த்தத்தின் இயல்பு குறித்த கீதையின் நுண்ணறிவுகளிலிருந்து பெறப்பட்டது.
மேலை நாடுகளில் அறிஞர்கள் மத்தியில் முக்கியத்துவம் பெற்றிருந்த இவ்பகவத் கீதையானது மேலும் பல வழிகளில் மேலைநாட்டு மக்களிடையே ஒரு உன்னதமான படைப்பாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது எனலாம். அந்த வகையில் இன்றைய 20 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் மேலை நாடுகளின் இதனுடைய தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது எனலாம.; அதற்கு சில எடுத்துக்காட்டுகளாக ஐக்கிய அமெரிக்காவில் துளசி கபாத் என்பவர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவி பிரமாணத்தின் போது வெள்ளை மாளிகையில் வைத்து பகவத் கீதையின் மீது சத்திய பிரமாணம் செய்து தனது பதவியினை ஏற்றுக் கொண்டார். இது மேலை நாடுகளில் பகவத் கீதையை ஒரு உன்னத நிலைக்கு எடுத்துச் சென்றதை எடுத்துக்காட்ட கூடிய செயல்பாடு ஆகும்.
மேலும் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் நடிகர் வில் ஸ்மித் போன்ற ஆளுமைகள் பகவத் கீதையின் ஞானத்தில் உத்வேகம் கண்டுள்ளனர். சுனிதா வில்லியம்ஸ், கீதையின் ஒரு பிரதியைத் தன்னுடன் விண்வெளிக்கு எடுத்துச் சென்று, பூமியைச் சுற்றி வரும்போது அதன் ஆன்மீக வழிகாட்டுதல்களைப் பற்றிச் சிந்தித்தார்.
அதேபோல 2014 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவில் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற ஸ்ரீகாந்தன் எனும் தமிழர் பகவத் கீதையின் மீது சத்திய பிரமாணம் செய்து தனது நீதிபதி பதவியினை ஏற்றுக் கொண்டார.; அதேபோல ஐக்கிய அமெரிக்கா பாராளுமன்றத்தில் பக்தி வேதாந்தா சக்தி பிரபுபாதாவினுடைய பகவத் கீதை சொற்பொழிவுகள் கூறப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. பிரித்தானியாவின் ஜனாதிபதியாக இருந்த டேவிட் கமரூன் என்பவர் பகவத் கீதையை ஒரு புனித நூல் என கூறியுள்ளார்.
அதேபோல ஆஸ்திரேலியா பாராளுமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர் அமைச்சரவையில் டேனியல் முகில் எனும் உறுப்பினர் பகவத் கீதையின் மீது சத்திய பிரமாணம் செய்து தனது பதவி பிரமாணத்தை செய்தார்.
இவ்வாறு எழுதிய நாடுகளில் தாக்கம் செலுத்தி வருகின்ற பகவத் கீதையானது உலகளாவிய ரீதியில் 56க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும.; அதற்கு எடுத்துக்காட்டாக தாய்லாந்தின் தாய் மொழியிலேயே பகவத் கீதை மற்றும் மகாபாரதமானது மொழிபெயர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதனோடு இன்றைய காலகட்டத்தில் மேலைத்தேய நாடுகளில் அவர்களுடைய பாடத்திட்டங்களிலும் ஒரு பாடமாக பகவத் கீதை அமையப்பெற்றுள்ளது.
இதனில் குறிப்பாக 1944 ஆம் ஆண்டு பக்தி வேதாந்தா பிரபுபாதா அவரினுடைய பகவத் கீதையின் ஆங்கில மொழிபெயர்ப்பான ‘பகவத் கீதை உண்மை உருவில்” என்பது மேலைத்தேய நாடுகளில் வாழும் மக்களிலேயே பெரும் தாக்கத்தை செலுத்தியது எனலாம.;
அனைத்து மக்களும் தமது வாழ்க்கை வழிகாட்டியாக இந்த பகவத் கீதையின் சிந்தனைகளை தமது வாழ்வியலில் கடைபிடித்து வருகின்றனர். சிறந்த முறையில் ஒழுக்கமாகவும் நேர்மையாகவும் தர்மத்துடனும் வாழுவதற்கு வழிகாட்டியாக இதனை கையாண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு மேலைநாட்டுமக்களிடையே அன்று தொடங்கி இன்று வரையிலும் தங்களது வாழ்கையின் ஒரு அங்கமாக முக்கியத்துவபடுத்தும் அளவிற்கு கீதையானதுசிறப்பு; பெற்று விளங்குகின்றது என்றால் மிகையாகாது.
கனகரத்னம் ரோஹிணி
இந்து நாகரிகத்துறைஇ
கிழக்குப் பல்கலைகழகம்
இலங்கை.
