கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் அதிகபட்ச மழைவீழ்ச்சி நுவரெலியா – நோர்ட்டன் பகுதியில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, நோர்ட்டன் பகுதியில் 258.6 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரையான காலப்பகுதியில் கெனியன் பகுதியில் 234.6 மில்லிமீற்றரும், லக்ஷபானவில் 208 மில்லிமீற்றரும், காசல்ரீயில் 164 மில்லிமீற்றரும் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
மேலும், மாவுஸ்ஸாக்கலையில் 125 மில்லிமீற்றர், மேல் கொத்மலையில் 110.3 மில்லிமீற்றர் மற்றும் கொத்மலைப் பகுதியில் 105 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
