களுத்துறை, பயாக்கல பகுதியில் நேற்று (31)இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 28 வயதுடைய நபரே, நாகொட வைத்தியசாலையில் அவசர சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பிலான பின்னணி மற்றும் துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர்களைக் கண்டறியும் நோக்கில் பயாக்கல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
