கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சமித்புர பகுதியில் நேற்று மாலை திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது ஆயிரம் போதை மாத்திரைகளுடன் 35 வயதுடைய பெண் ஒருவரைக் குற்றப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
