Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

தலவாக்கலையில் திடீர் வேலி அமைப்பால் வாழ்வாதாரம் பாதிப்பு – பெண்கள் போராட்டம்

November 26, 2026

தித்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கந்தகெட்டிய 19 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்

November 26, 2026

கம்பளை இந்துக் கல்லூரியின் புதிய அதிபராகத் திரு. வடிவேல் முத்தையா கடமையேற்பு!

November 26, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » எல்-நினோ தாக்கத்தை எதிர்கொள்ள நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழு நான்காவது முறையாக கூடியது
இலங்கை

எல்-நினோ தாக்கத்தை எதிர்கொள்ள நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழு நான்காவது முறையாக கூடியது

ThanaBy ThanaSeptember 3, 2026No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

எல்-நினோ தாக்கத்தை எதிர்கொள்ள நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழு நான்காவது முறையாக கூடியது

– எல்-நினோ தாக்கத்தினால் தொழில் இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க புதிய செயற் திட்டம்

எல்-நினோ காலநிலை தாக்கத்திற்கு முகங்கொடுப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்தி தலைமையில் நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழுவின் 4ஆவது கூட்டம் அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

எல்-நினோ தாக்கம் காரணமாக வேலைவாய்ப்புகளை இழக்கும் அபாயத்தில் உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து இதன் போது விசேடமாக கவனம் செலுத்தப்பட்டது.

எல்-நினோ காலநிலை காரணமாக மரக்கறி மற்றும் பழச்செய்கைகளுக்கு ஏற்படக்கூடிய அபாயத்தைக் குறைப்பது தொடர்பிலும், நாட்டில் மரக்கறித் தட்டுப்பாடு ஏற்படாதவாறு பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இதுவரை 6 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் எல்-நினோ தாக்கத்திற்கு ஆளாகியுள்ளதால், அப்பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கையை வழமைபோல் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான தடையற்ற நீர் விநியோகத்திற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்களின் முன்னேற்றமும் மீளாய்வு செய்யப்பட்டது.

பெரும்போகத்தை ஆரம்பிப்பது தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை செப்டம்பர் 4 ஆம் திகதி நடத்துவதற்கும், எல்-நினோ தாக்கத்திற்குள்ளாகியுள்ள ஆறு மாவட்டங்களின் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் ‘சூம்’ தொழில்நுட்ப ஊடாக கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டதுடன், செப்டம்பர் 14 ஆம் திகதி உபகுழு மீண்டும் கூடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, விசேட அமைச்சரவை உபகுழுவின் செயலாளர்/அழைப்பாளர் மற்றும் அதிகாரிகள் குழுவின் தலைவர்/ஜனாதிபதி பணிக் குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கே.ஆர். உடுவாவல, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி.பி. விக்ரமசிங்க, வர்த்தக, வணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே.ஏ. விமலேந்திரராஜா, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க, வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ.எல்.கே. விஜேமான்னகே, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட உள்ளிட்ட சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள் பலரும் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    வரவு செலவுத்திட்டம் முடிந்த கையோடு பயப்படாமல் மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள்-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

    November 26, 2026

    20 முதல் 24 வயதுக்குட்பட்ட இளையோரிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

    November 26, 2026

    இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை

    November 24, 2026

    நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம் .

    November 24, 2026
    Editors Picks

    தலவாக்கலையில் திடீர் வேலி அமைப்பால் வாழ்வாதாரம் பாதிப்பு – பெண்கள் போராட்டம்

    November 26, 2026

    தித்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கந்தகெட்டிய 19 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்

    November 26, 2026

    கம்பளை இந்துக் கல்லூரியின் புதிய அதிபராகத் திரு. வடிவேல் முத்தையா கடமையேற்பு!

    November 26, 2026

    வரவு செலவுத்திட்டம் முடிந்த கையோடு பயப்படாமல் மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள்-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

    November 26, 2026

    தலவாக்கலையில் திடீர் வேலி அமைப்பால் வாழ்வாதாரம் பாதிப்பு – பெண்கள் போராட்டம்

    November 26, 2026

    தித்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கந்தகெட்டிய 19 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்

    November 26, 2026

    கம்பளை இந்துக் கல்லூரியின் புதிய அதிபராகத் திரு. வடிவேல் முத்தையா கடமையேற்பு!

    November 26, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.