தெல்தெனிய, விக்டோரியாப் பகுதியில் உள்ள விடுதியொன்றில் நடத்தப்பட்ட பேஸ்புக் விருந்தின் மீது பொலிஸார் நடத்திய திடீர் சோதனையின் போது 36 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் உட்பட 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிடைத்த ரகசியத் தகவலுக்கு அமையத் தெல்தெனிய பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட இச்சோதனையின் போது, கஞ்சா, ஐஸ், ஹஷிஸ், எக்ஸ்டசி மாத்திரைகள் மற்றும் சட்டவிரோத சிகரெட்டுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப்பொருட்களும் மதுபானங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் 21 முதல் 43 வயதுக்குட்பட்ட கண்டி, பேராதனை, தெஹிவளை மற்றும் ஹங்குராங்கெத உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
இச்சம்பவம் தொடர்பில் தெல்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
