அஸ்வசும நலன்புரி நிதி ஒதுக்கீட்டில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில், நுவரெலியா மாவட்டம் நோர்வூட் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் இயங்கும் இளைஞர் மன்ற ஊழியர் ஒருவரும், அவரது மனைவியும் பணியில் இருந்து உடனடி நடைமுறைக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளனர்.
பொகவந்தலாவையைச் சேர்ந்த குறித்த இளைஞர் மன்ற ஊழியர், அஸ்வசும நிதி ஒதுக்கீட்டை தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பாடசாலை ஆசிரியையாகப் பணியாற்றி வந்த இவரது மனைவிக்கும் இந்த நிதி முறைகேட்டில் நேரடித் தொடர்பு இருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதைத் தொடர்ந்து, அவரும் தனது ஆசிரியர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸாரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
