மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலை காரணமாக, சவூதி அரேபியாவிற்கான விமானச் சேவைகளில் தடங்கல்கள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சவூதிக்கு பயணம் மேற்கொள்ளும் இலங்கை மக்களுக்கு, ஜித்தாவிலுள்ள இலங்கை துணைத் தூதரகம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
குறிப்பாக, உம்ரா யாத்திரை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள நபர்கள், தமது பயண ஏற்பாடுகளின் போது மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அத்துடன், பயண முகவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதுடன், எதிர்பாராத சூழ்நிலைகளை எதிர்கொள்ள ஏற்ற மாற்றுப் பயணத் திட்டங்களைக் கைவசம் வைத்திருக்குமாறும் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
