இலங்கையின் இசை வரலாற்றில் புதிய மைல்கல்லாக, உலகப் புகழ்பெற்ற சர்வதேச கலைஞர் டி.ஜே. ஸ்நேக் (DJ Snake) மற்றும் நாட்டின் முன்னணி இசைக் கலைஞர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட ‘சென்டர் இசை விழா’ (Senter Music Festival) கொழும்பு போர்ட் சிட்டியில் அரங்கேற உள்ளது.
வரும் அக்டோபர் 30 மற்றும் 31 ஆகிய இரண்டு நாள்கள் இந்த மெகா இசைத் திருவிழா நடைபெறவுள்ளது.
முதல் நாள் (அக்டோபர் 30): பதியா மற்றும் சந்தேஷ் (BNS), வஸ்தி (Wasthi), ADK உள்ளிட்ட இலங்கையின் முன்னணி இசைக் கலைஞர்களின் கலாச்சார மற்றும் இசை நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.
இரண்டாம் நாள் (அக்டோபர் 31): “Lean On”, “Taki Taki” உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற பாடல்களின் மூலம் அறியப்பட்ட சர்வதேச எலக்ட்ரானிக் நடன இசைத் தலைவர் டி.ஜே. ஸ்நேக் முதன்முறையாக இலங்கையில் தனது நேரலை இசை நிகழ்ச்சியை வழங்குகிறார்.
இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் அகில இலங்கை அளவில் டி.ஜே. போட்டி மற்றும் காஸ்ப்ளே (Cosplay) போட்டிகள் நடத்தப்படுவதுடன், பார்வையாளர்களின் வசதிக்காக முழுக்க முழுக்க பணமில்லா பரிவர்த்தனை (Cashless/NFC) முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
டிக்கெட் விபரங்கள் மற்றும் மேலதிகத் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம்.
