தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து ‘சிறிலிய சவிய’ கணக்குக்கு மாற்றப்பட்ட 10 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட ஷிரந்தி ராஜபக்ஷ பிணையில் விடுவிக்கப்பட்டார்.
கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரமையினால் நேற்று வெள்ளிக்கிழமை இந்த பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சந்தேகநபரின் இதயத் தமனிகளில் அடைப்பு ஏற்பட்டுள்ளமையால், அவருக்கு உடனடியாக கரோனரி தமனி பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய அவசியமுள்ளது என கொழும்பு தேசிய வைத்தியசாலை நீதிமன்றத்திற்கு மருத்துவ அறிக்கைகளைச் சமர்ப்பித்திருந்தது.
இந்த மருத்துவ அறிக்கைகளைக் கருத்திற்கொண்ட நீதவான், சந்தேகநபரை ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்க உத்தரவிட்டார்.
அத்துடன், ஷிரந்தி ராஜபக்ஷவின் வெளிநாட்டுப் பயணங்களுக்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
