தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ‘தேனிசைத் தென்றல்’ தேவா காலமானார்.
அவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு மற்றும் மாரடைப்பு காரணமாக, சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிர் பிரிந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாட்டுப்புறப் பாடல்களையும் கானாப் பாடல்களையும் தமிழ்த் திரைப்பட இசையில் புகுத்தி கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்த தேவா அவர்களின் மறைவு, கலை உலகிற்கு மீளாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்குத் திரையுலகினர் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
