Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கொழும்பு 13 கதிரேசன் விளையாட்டு கழகத்தின் கல்விப் பணி: சாதனை மாணவர்களுக்கு உதவித்தொகைகள் வழங்கி கௌரவிப்பு!

October 18, 2026

நான் இலங்கையைச் சேர்ந்த மலையகத் தமிழன்!” – உலக அரங்கில் தனது அடையாளத்தைப் பதிவு செய்த ஜீவன் தொண்டமான்!

October 18, 2026

ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் புற்றுநோயை வெல்லலாம்: கொட்டாஞ்சேனையில் பெண்களுக்கான இலவச மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை முகாம்!

October 18, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கொழும்பு 13 கதிரேசன் விளையாட்டு கழகத்தின் கல்விப் பணி: சாதனை மாணவர்களுக்கு உதவித்தொகைகள் வழங்கி கௌரவிப்பு!
இலங்கை

கொழும்பு 13 கதிரேசன் விளையாட்டு கழகத்தின் கல்விப் பணி: சாதனை மாணவர்களுக்கு உதவித்தொகைகள் வழங்கி கௌரவிப்பு!

ThanaBy ThanaOctober 18, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கொழும்பு 13 கதிரேசன் விளையாட்டு கழகத்தின் கல்விப் பணி: சாதனை மாணவர்களுக்கு உதவித்தொகைகள் வழங்கி கௌரவிப்பு!*

கொழும்பு-13, கதிரேசன் வீதியில் இயங்கிவரும் பிரபல ‘கதிரேசன் விளையாட்டு கழகம்’ விளையாட்டுத் துறையில் மட்டுமன்றி, கல்வி மற்றும் சமூகச் சேவைகளிலும் தொடர்ச்சியாகத் தடம் பதித்து வருகிறது.

அந்த வகையில், அண்மையில் இக்கழகத்தினால் ஏற்பாடு செய்து நடத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் போது, கடந்த 2025-ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்திகளைப் பெற்றுச் சாதனை படைத்த மாணவ மாணவியர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

கொழும்பு கணபதி இந்து மகளிர் மகா வித்தியாலயம், கொழும்பு நல்லாயன் தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் முகத்துவாரம் இந்து கல்லூரி ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளே இவ்வாறு கௌரவிக்கப்பட்டதோடு, அவர்களுக்கான உதவித்தொகைகளும் வழங்கப்பட இருப்பதாக கழகத்தினால் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

அவ்வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், சாதனை மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வும், எட்டியாந்தோட்டை பிரதேசத்தில் இருந்து பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியுள்ள மாணவி ஒருவருக்கான மாதாந்த போக்குவரத்து உதவித்தொகை வழங்கும் நிகழ்வும் நேற்றைய தினம் கொழும்பு செட்டியார் தெருவில் அமைந்துள்ள கல்யாண முருகன் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

கதிரேசன் விளையாட்டு கழகத்தின் தலைவர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கழகத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப் பலரும் திரளாகக் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர். இதன்போது மாணவ மாணவியர்களுக்கு தலா ரூபாய் இருபத்தைந்தாயிரம் (25000/-) வீதம் காசோலை வழங்கி வைக்கப்பட்டது.

கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்களின் உயர் கல்விக் கனவை நனவாக்கும் நோக்கில் கதிரேசன் விளையாட்டு கழகம் முன்னெடுத்து வரும் இத்தகைய கல்விப் பணிகள் மற்றும் சமூக நலத்திட்டங்கள் பொதுமக்கள் மத்தியிலும் கல்விச் சமூகத்தினர் மத்தியிலும் பெருமளவு பாராட்டைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நான் இலங்கையைச் சேர்ந்த மலையகத் தமிழன்!” – உலக அரங்கில் தனது அடையாளத்தைப் பதிவு செய்த ஜீவன் தொண்டமான்!

    October 18, 2026

    ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் புற்றுநோயை வெல்லலாம்: கொட்டாஞ்சேனையில் பெண்களுக்கான இலவச மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை முகாம்!

    October 18, 2026

    கிரிந்திவெலவில் திரையரங்கு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு ஆயுதங்கள் மீட்பு; ஒருவர் கைது!

    October 18, 2026

    நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் மழை; சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு!

    October 18, 2026
    Editors Picks

    கொழும்பு 13 கதிரேசன் விளையாட்டு கழகத்தின் கல்விப் பணி: சாதனை மாணவர்களுக்கு உதவித்தொகைகள் வழங்கி கௌரவிப்பு!

    October 18, 2026

    நான் இலங்கையைச் சேர்ந்த மலையகத் தமிழன்!” – உலக அரங்கில் தனது அடையாளத்தைப் பதிவு செய்த ஜீவன் தொண்டமான்!

    October 18, 2026

    ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் புற்றுநோயை வெல்லலாம்: கொட்டாஞ்சேனையில் பெண்களுக்கான இலவச மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை முகாம்!

    October 18, 2026

    கிரிந்திவெலவில் திரையரங்கு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு ஆயுதங்கள் மீட்பு; ஒருவர் கைது!

    October 18, 2026

    கொழும்பு 13 கதிரேசன் விளையாட்டு கழகத்தின் கல்விப் பணி: சாதனை மாணவர்களுக்கு உதவித்தொகைகள் வழங்கி கௌரவிப்பு!

    October 18, 2026

    நான் இலங்கையைச் சேர்ந்த மலையகத் தமிழன்!” – உலக அரங்கில் தனது அடையாளத்தைப் பதிவு செய்த ஜீவன் தொண்டமான்!

    October 18, 2026

    ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் புற்றுநோயை வெல்லலாம்: கொட்டாஞ்சேனையில் பெண்களுக்கான இலவச மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை முகாம்!

    October 18, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.