நாட்டில் பாதாள உலகக் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களைக் கட்டுப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய சட்டமூலம் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், தலைமுடி நீளமாக வளர்ப்பவர்களோ அல்லது உடலில் பச்சைக்குத்தியிருப்பவர்களோ இச்சட்டத்தின் கீழ் உடனடியாகக் குற்றவாளிகளாகக் கருதப்பட்டு சிறையில் அடைக்கப்படுவர் எனப் பரவும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என மறுத்துள்ளார்.
மக்களின் தனிப்பட்ட சுதந்திரத்திலோ அல்லது அடிப்படை உரிமைகளிலோ இந்தச் சட்டம் தலையிடாது எனக் குறிப்பிட்ட அமைச்சர், போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குற்றங்களை ஒழிப்பதே இதன் முதன்மை நோக்கம் என்றும் சுட்டிக்காட்டினார்.
