ஹரிஸ்பத்துவ – பூஜாப்பிட்டிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை காலை முதல் நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.
நாளை புதன்கிழமை காலை 09.00 மணி முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 03.00 மணி வரை தொடர்ச்சியாக 42 மணி நேரத்திற்கு இந்த நீர் வெட்டு அமலில் இருக்கும் எனத் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
மெதவெல, கலகெதர, மாவத்தகம மற்றும் ரம்புக்கன வீதியைச் சுற்றியுள்ள பல பகுதிகள் இதனால் பாதிக்கப்படவுள்ளதால், பொதுமக்கள் தேவையான நீரை முன்கூட்டியே சேகரித்துச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

