சவூதி அரேபியாவின் தம்மாம் நகரிலுள்ள கிங் ஃபஹத் சர்வதேச விமான நிலையம் மீது நேற்று மாலை நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.
இத்தகவலை அந்நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்துப் பொது அதிகாரசபை உறுதிப்படுத்தியுள்ளது.
காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தாக்குதலால் விமான நிலையத்திற்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதேவேளை, சவூதியின் கிழக்குப் பகுதியில் ஊடுருவ முயன்ற 4 ஆளில்லா வான்வழித் தாக்குதல்கள் இடைமறித்து அழிக்கப்பட்டதாகச் சவூதி கூட்டுப் படை தெரிவித்துள்ளது.
