ஜனநாயக தேசிய கூட்டணியின் பதுளை மாவட்டம், பண்டாரவளை பிரதேச அமைப்பாளராகக் களாதரன் ஆகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது, கட்சியின் தலைவர் பிரபா கணேசன் அவர்களால் இந்த நியமனக் கடிதம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.இந்நிகழ்வில் ஜனநாயக தேசிய கூட்டணியின் தேசிய அமைப்பாளர் நிரூஷ்க குமார மற்றும் பதுளை மாவட்ட அமைப்பாளர் கோபாலகிருஷ்ணன் திலீபன் ஆகியோர் உடனிருந்தனர்.
