சென்றெகுலர்ஸ் கங்கா விளையாட்டு கழகம் நாடாத்திய அணிக்கு எட்டுப்பேர் கொண்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி சென்றெகுலர்ஸ் பொது விளையாட்டு மைதானத்தில்
கடந்த மூன்று நாட்களாக
(4,5,6 மார்ச் 2023)நடைபெற்றது.
போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாக
கல்வி இராஜாங்க அமைச்சர்
அ.அரவிந்தகுமார் அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் பிரதேச சபைத் தலைவர் திரு.சதாசிவம்,
அக்கரபத்தனை பிரதேச சபை உறுப்பினர் புஷ்பராஜ்,
அமைப்பாளர்களான பிரதீப்,ரமேஷ் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
அக்கரபத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட 16 அணிகள் பங்கு பற்றி சிறப்பித்த இந்தப் போட்டியில் ஹென்போல்ட் “RIDER”(ரைடர்)
அணி முதாவது இடத்தையும் கலிடோனியா”KOD”இரண்டாவது இடத்தையும் நல்லதண்ணி ஜெயசக்தி அணி மூன்றாவது இடத்தையும் பெற்றது.
போட்டியில் ஆட்ட நாயகன்,சிறந்த துடுப்பாட்ட வீரர்,
சிறந்த பந்துவீச்சாளர்,
சகலதுறை வீரருக்கான கிண்ணங்களும் வழங்கப்பட்டது.
(அ.ரெ.அருள்)