Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நாளை அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஒரு நாள் அடையாளப் பணிப்புறக்கணிப்பு…

October 29, 2026

அஸ்வசும திட்டம்: அக்டோபர் மாத முதியோர் கொடுப்பனவு இன்று முதல் வங்கி கணக்குகளில் வைப்பு!

October 29, 2026

சர்வதேச வெற்றிகளுடன் ஆரோக்கியமான தேசத்தை உருவாக்க ஜனாதிபதி அறிவுறுத்தல்!

October 29, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » சர்வதேச வெற்றிகளுடன் ஆரோக்கியமான தேசத்தை உருவாக்க ஜனாதிபதி அறிவுறுத்தல்!
இலங்கை

சர்வதேச வெற்றிகளுடன் ஆரோக்கியமான தேசத்தை உருவாக்க ஜனாதிபதி அறிவுறுத்தல்!

ThanaBy ThanaOctober 29, 2026No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

சர்வதேச வெற்றிகளை இலக்காகக் கொண்ட விளையாட்டு வீரர்களை உருவாக்குவதுடன், ஆரோக்கியமான மக்களுக்காக விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்கான திட்டமிடல்களை உருவாக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்

சர்வதேச மட்டத்தில் வெற்றிகளை பெற்றுக்கொள்ளக் கூடிய வீர வீராங்கனைகளை உருவாக்குவதுடன், நாட்டில் விளையாட்டு கலாசாரமொன்றைக் கட்டியெழுப்பி ஆரோக்கியமான மக்களை உருவாக்கும் நோக்கத்துடன் விளையாட்டை மேம்படுத்துவதற்கான திட்டங்களை உருவாக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொடர்பில் இன்று (29) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்ற போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

சுகாதாரத் துறை தற்போது எதிர்கொள்ளும் முக்கிய சவாலாக தொற்றா நோய்கள் மாறியுள்ளது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்தச் சவாலை எதிர்கொள்வதற்கு விளையாட்டுத் துறையானது பரந்ததொரு பங்கை ஆற்ற முடியும் என்று குறிப்பிட்டார். அதற்காக, மக்களின் மனப்பாங்கில் மாற்றத்தை ஏற்படுத்தி, சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பேணுவதற்காக மக்களை அதிகமாக விளையாட்டின் பக்கம் ஈர்க்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

மேலும், நாடு முழுவதும் நடைபயிற்சி பாதைகள் நிர்மாணிக்கப்பட்டிருந்தாலும், சில பிரதேசங்களில் அவற்றின் ஊடாக எதிர்பார்க்கப்படும் பயனை உரிய முறையில் பெற்றுக்கொள்ள முடியாமல் போயுள்ளதாகவும், அந்த வசதிகளைப் பயன்படுத்துவதற்காக மக்களை ஊக்குவிக்கும் புதிய வேலைத்திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

நாடு முழுவதும் உள்ள மைதானங்கள், நடைபயிற்சிப் பாதைகள் மற்றும் உள்ளக விளையாட்டரங்குகள் குறித்த துல்லியமான மற்றும் புதுப்பிக்கப்பட்ட தரவுத் தளத்தைப் பேணுவதன் மூலம் இந்தத் திட்டங்களை முறையாகத் திட்டமிட முடியும் என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.

இலங்கை வீர வீராங்கனைகளின் திறமைகளை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்தும் வகையில் தேசிய உயர் செயல்திறன் மையம் ஒன்றை நிறுவுதல், அநுராதபுரத்தில் 400 மீட்டர் செயற்கை ஓடுதளத்தை அமைத்தல், தியகம சர்வதேச விளையாட்டரங்கில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து அதனை மேம்படுத்துதல் மற்றும் சுகததாச உள்ளக விளையாட்டரங்கை மேம்படுத்துதல் போன்றவையும், விளையாட்டு மருத்துவ நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களும் இணைந்து விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி தொடர்பில் மேற்கொள்ளும் ஆராய்ச்சி நடவடிக்கைகள் உள்ளிட்ட 2027 ஆம் ஆண்டுக்கான புதிய திட்டங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இளைஞர் படையணி மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஆகியவற்றால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.

இளைஞர் அலுவல்கள் பிரதி அமைச்சர் தினிது சமன் ஹென்னாயக்க, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும, விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் பதில் செயலாளர் எஸ். அச்சுதன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுபுன் விஜேரத்ன, தேசிய இளைஞர் படையணியின் தலைவர் நலின் ரதம்பல ஆகியோருடன் நிதி அமைச்சு மற்றும் இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2026-10-29

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நாளை அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஒரு நாள் அடையாளப் பணிப்புறக்கணிப்பு…

    October 29, 2026

    அஸ்வசும திட்டம்: அக்டோபர் மாத முதியோர் கொடுப்பனவு இன்று முதல் வங்கி கணக்குகளில் வைப்பு!

    October 29, 2026

    மீரியபெத்த மண்சரிவு அனர்த்தத்திற்கு இன்றுடன் 12 ஆண்டுகள்: வீடமைப்புப் பிரச்சினைக்கு இன்னும் தீர்வு எட்டப்படவில்லை என ஆதங்கம்!

    October 29, 2026

    அஸ்வெசும புதுப்பிக்கப்பட்ட பட்டியல் வெளியீடு: 13 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் தகுதியிழப்பு!

    October 29, 2026
    Editors Picks

    நாளை அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஒரு நாள் அடையாளப் பணிப்புறக்கணிப்பு…

    October 29, 2026

    அஸ்வசும திட்டம்: அக்டோபர் மாத முதியோர் கொடுப்பனவு இன்று முதல் வங்கி கணக்குகளில் வைப்பு!

    October 29, 2026

    சர்வதேச வெற்றிகளுடன் ஆரோக்கியமான தேசத்தை உருவாக்க ஜனாதிபதி அறிவுறுத்தல்!

    October 29, 2026

    மீரியபெத்த மண்சரிவு அனர்த்தத்திற்கு இன்றுடன் 12 ஆண்டுகள்: வீடமைப்புப் பிரச்சினைக்கு இன்னும் தீர்வு எட்டப்படவில்லை என ஆதங்கம்!

    October 29, 2026

    நாளை அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஒரு நாள் அடையாளப் பணிப்புறக்கணிப்பு…

    October 29, 2026

    அஸ்வசும திட்டம்: அக்டோபர் மாத முதியோர் கொடுப்பனவு இன்று முதல் வங்கி கணக்குகளில் வைப்பு!

    October 29, 2026

    சர்வதேச வெற்றிகளுடன் ஆரோக்கியமான தேசத்தை உருவாக்க ஜனாதிபதி அறிவுறுத்தல்!

    October 29, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.