Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 27ஆவது சிரார்த்த தினம் அனுஷ்டிப்பு

October 30, 2026

அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஒரு நாள் அடையாளப் பணிப்புறக்கணிப்பு…

October 30, 2026

இன்று இடியுடன் கூடிய பலத்த மழை எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

October 30, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 27ஆவது சிரார்த்த தினம் இன்று
மலையகம்

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 27ஆவது சிரார்த்த தினம் இன்று

ThanaBy ThanaOctober 30, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மலையகத் தமிழ் மக்களின் உரிமைக்காகவும், தொழிலாளர் வர்க்கத்தின் முன்னேற்றத்திற்காகவும் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த மலையகத்தின் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 27ஆவது சிரார்த்த தினம் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகின்றது.

​1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி பிறந்த அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், மலையக அரசியல் வரலாற்றில் அழியாத தடம் பதித்த தலைவராவார். இலங்கையில் வாழ்ந்த இந்திய வம்சாவளித் தமிழர்களின் உரிமைகள், குடியுரிமை மற்றும் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக அவர் ஆற்றிய பங்களிப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

​1947ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டத்தின் விளைவாகப் பெருமளவிலான மலையகத் தமிழர்கள் குடியுரிமையையும் வாக்குரிமையையும் இழந்த சூழலில், அவர்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்காக அவர் பல்வேறு போராட்டங்களையும் அரசியல் நடவடிக்கைகளையும் முன்னெடுத்தார். குறிப்பாக, 1980களில் குடியுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்காக அவர் மேற்கொண்ட அரசியல் முயற்சிகள் மூலம், மலையக மக்களின் குடியுரிமை மற்றும் வாக்குரிமையை மீளப் பெற்றுக்கொடுப்பதில் அவர் குறிப்பிடத்தக்க பங்காற்றினார்.

​இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஊடாகத் தோட்டத் தொழிலாளர்களை ஒன்றிணைத்து, அவர்களின் உரிமைகள் மற்றும் சமூக முன்னேற்றத்திற்காகத் தொடர்ச்சியாகக் குரல்கொடுத்த அவர், தொழிலாளர் உரிமைகளை சர்வதேச அரங்கிலும் முன்னிறுத்தினார். சர்வதேச தொழில் மாநாடுகளில் பங்கேற்று, தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் நலன்கள் தொடர்பான விடயங்களை உலகளாவிய மட்டத்தில் எடுத்துரைத்தார்.

​வசதி வாய்ப்புகளுடன் வாழக்கூடிய சூழல் இருந்தபோதிலும், தனது மக்களின் துயரங்களையும் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கே அவர் முன்னுரிமை அளித்தார். மலையக மக்களிடையே அரசியல் விழிப்புணர்வையும் ஒற்றுமையையும் வளர்த்தெடுத்த அவர், 1999ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ஆம் திகதி தனது 86ஆவது வயதியில் காலமானார். அவர் மறையும் காலப்பகுதியில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவராகவும், அமைச்சராகவும் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

​மலையக மக்களின் அரசியல் உரிமைகளுக்காகப் போராடிய முன்னோடிகளில் ஒருவராகவும், தொழிலாளர் வர்க்கத்தின் குரலாகவும் திகழ்ந்த அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் சேவைகளும் தியாகங்களும் மலையக வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 27ஆவது சிரார்த்த தினம் அனுஷ்டிப்பு

    October 30, 2026

    இன்று இடியுடன் கூடிய பலத்த மழை எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

    October 30, 2026

    அஸ்வசும திட்டம்: அக்டோபர் மாத முதியோர் கொடுப்பனவு இன்று முதல் வங்கி கணக்குகளில் வைப்பு!

    October 29, 2026

    மீரியபெத்த மண்சரிவு அனர்த்தத்திற்கு இன்றுடன் 12 ஆண்டுகள்: வீடமைப்புப் பிரச்சினைக்கு இன்னும் தீர்வு எட்டப்படவில்லை என ஆதங்கம்!

    October 29, 2026
    Editors Picks

    அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 27ஆவது சிரார்த்த தினம் அனுஷ்டிப்பு

    October 30, 2026

    அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஒரு நாள் அடையாளப் பணிப்புறக்கணிப்பு…

    October 30, 2026

    இன்று இடியுடன் கூடிய பலத்த மழை எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

    October 30, 2026

    அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 27ஆவது சிரார்த்த தினம் இன்று

    October 30, 2026

    அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 27ஆவது சிரார்த்த தினம் அனுஷ்டிப்பு

    October 30, 2026

    அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஒரு நாள் அடையாளப் பணிப்புறக்கணிப்பு…

    October 30, 2026

    இன்று இடியுடன் கூடிய பலத்த மழை எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

    October 30, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.