அக்கரபத்தனை பிரதேச சபையின் வரவு–செலவுத் திட்டம் நிறைவேற்றம்!
அக்கரபத்தனை பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டம், நேற்று (29) நடைபெற்ற விசேட சபைக் கூட்டத்தில் 3 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரதேச சபையின் கூட்ட மண்டபத்தில், சபையின் தவிசாளர் சத்தியமூர்த்தி ரதிதேவி தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில், வரவு–செலவுத் திட்டம் சபையின் அங்கீகாரத்திற்காகச் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சபையின் 6 உறுப்பினர்கள் சமூகமளிக்காத நிலையில், கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்களிடையே வாக்கெடுப்பு இடம்பெற்றது.
அப்போது, திட்டத்திற்கு ஆதரவாக 6 வாக்குகளும் எதிராக 3 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கமைய, 3 மேலதிக வாக்குகளால் வரவு–செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.
கௌசல்யா
