ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் மல்லியப்பு பகுதியில் இன்று காலை இடம்பெற்ற தொடர் வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதுடன், நான்கு வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
ஒரே திசையில் பயணித்த நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை எட்டரை மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
