வாரியப்பொல, ஹல்மில்லேவ பகுதியில் வாடகைக்குத் தங்கியிருந்த நபர் நடத்திய கூர்மையான ஆயுதத் தாக்குதலில் வீட்டு உரிமையாளர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர்.
வீட்டினருக்கும் வாடகைதாரருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையிலேயே, இன்று அதிகாலை இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் 56 வயதுடைய வீட்டின் உரிமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், அவரது மனைவியும் மகளும் படுகாயமடைந்த நிலையில் நிகவெரட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தலைமறைவாகியுள்ள சந்தேகநபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை வாரியப்பொல பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
