Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

அநுராதபுரம் ருவன்வெலிசாய வளாகத்தில் பதற்றம்; கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட மூவர் பொலிஸ் தடுப்புக் காவலில்

November 12, 2026

ருவன்வெலிசாய விகாரை முன்றலில் பதற்றம்; பலாங்கொடை கஸ்ஸப தேரருக்கு குற்றத் தடுப்புப் பிரிவு அழைப்பு!

November 12, 2026

ஹட்டனில் வெள்ள அபாயம்: சட்டவிரோத கட்டுமானங்கள் அகற்ற நடவடிக்கை !

November 12, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஹட்டனில் வெள்ள அபாயம்: சட்டவிரோத கட்டுமானங்கள் அகற்ற நடவடிக்கை !
மலையகம்

ஹட்டனில் வெள்ள அபாயம்: சட்டவிரோத கட்டுமானங்கள் அகற்ற நடவடிக்கை !

ThanaBy ThanaNovember 12, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ஹட்டனில் வெள்ள அபாயத்தைக் குறைக்க நடவடிக்கை!

 

நீரோடைகளை மறித்த சட்டவிரோத கட்டுமானங்கள் அகற்றம்

ஹட்டன் பீலி ஹதர பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நீரோடைகளை மறித்து அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

கடந்த 10.11.2026 செவ்வாய்க்கிழமை நாம் வெளியிட்ட செய்தியைத் தொடர்ந்து, குறித்த பகுதியில் வெள்ள அபாயத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்கும் நோக்கில், நோர்வூட் பிரதேச செயலகத்தில் நேற்று முன்தினம் (10) விசேட அனர்த்த முகாமைத்துவக் கூட்டமொன்று நடைபெற்றது.

 

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீர, நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி, ஹட்டன் – டிக்கோயா நகர சபைத் தலைவர் அசோக கருணாரத்ன, நுவரெலியா மாவட்டச் செயலாளர் புஷ்பா தென்னகோன் மற்றும் நோர்வூட் பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, ஹட்டன் பொலிஸார் மற்றும் 114ஆவது இராணுவப் படைப்பிரிவினரின் ஒத்துழைப்புடன், பீலி ஹதர பகுதியில் நீரோடைகளை மறித்து அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத கட்டுமானங்கள் அகற்றப்பட்டன.

 

இந்த நடவடிக்கையின் மூலம் ஹட்டன் நகரிலிருந்து வெளியேறும் மழைநீர் தடையின்றி வழிந்தோடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் எதிர்காலத்தில் பீலி ஹதர பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயத்தைக் குறைக்க முடியும் எனவும் ஹட்டன் – டிக்கோயா நகர சபைத் தலைவர் அசோக கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

 

மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் சுகாதாரப் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று டெங்கு மற்றும் காய்ச்சல் நோய்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகளையும் மருந்து விநியோகத்தையும் முன்னெடுத்துள்ளனர்.

 

கௌசல்யா

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    அஸ்வெசும நிவாரணம்: மேல்முறையீடு மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க நாளை இறுதி நாள்!

    November 10, 2026

    தலவாக்கலை பிரதேசத்தில் தொடரும் கடை உடைப்புச் சம்பவங்கள் – மக்கள் மத்தியில் அச்சம்!

    November 10, 2026

    ஹட்டன் ஓயா பெருக்கெடுத்ததால் அடித்துச் செல்லப்பட்ட லொறி மீட்பு

    November 10, 2026

    ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்திற்குள் புகுந்த வெள்ளநீர்; முக்கிய ஆவணங்களும் மின்சாதனங்களும் சேதம்!

    November 10, 2026
    Editors Picks

    அநுராதபுரம் ருவன்வெலிசாய வளாகத்தில் பதற்றம்; கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட மூவர் பொலிஸ் தடுப்புக் காவலில்

    November 12, 2026

    ருவன்வெலிசாய விகாரை முன்றலில் பதற்றம்; பலாங்கொடை கஸ்ஸப தேரருக்கு குற்றத் தடுப்புப் பிரிவு அழைப்பு!

    November 12, 2026

    ஹட்டனில் வெள்ள அபாயம்: சட்டவிரோத கட்டுமானங்கள் அகற்ற நடவடிக்கை !

    November 12, 2026

    சவுதி மரண தண்டனையிலிருந்து முழுமையாக விடுக்கப்பட்ட சிவராசா அனோஜன் ஓரிரு வாரங்களில் நாடு திரும்புவார்

    November 11, 2026

    அநுராதபுரம் ருவன்வெலிசாய வளாகத்தில் பதற்றம்; கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட மூவர் பொலிஸ் தடுப்புக் காவலில்

    November 12, 2026

    ருவன்வெலிசாய விகாரை முன்றலில் பதற்றம்; பலாங்கொடை கஸ்ஸப தேரருக்கு குற்றத் தடுப்புப் பிரிவு அழைப்பு!

    November 12, 2026

    ஹட்டனில் வெள்ள அபாயம்: சட்டவிரோத கட்டுமானங்கள் அகற்ற நடவடிக்கை !

    November 12, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.