உழைக்கும் போது செலுத்தும் தனிப்பட்ட வருமான வரி விலக்கு வரம்பை ஒரு இலட்சத்து அறுபத்தீராயிரத்து ஐந்நூறு ரூபாவாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இருபது இருபத்தேழாம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட உரையை நிகழ்த்தும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
மாதத்திற்கு ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவாக இருந்த வரி விலக்கு வரம்பை மேலும் உயர்த்துவதன் மூலம், மாதாந்தச் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் ஒரு இலட்சத்து அறுபத்தீராயிரத்து ஐந்நூறு ரூபா வரை பெறுபவர்கள் எவரும் தமது சம்பளத்திற்கு வரி செலுத்தத் தேவையில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், தனிப்பட்ட வருமான வரி விகிதங்கள் ஆறு சதவீதம், பன்னிரண்டு சதவீதம், பதினெட்டு, இருபத்து நான்கு, முப்பது மற்றும் முப்பத்தாறு சதவீதம் எனத் திருத்தியமைக்கப்படவுள்ளன.
இந்தத் திருத்தங்களினூடாக வரி செலுத்துநர் ஒருவருக்கு மாதாந்தம் எழுநூற்று ஐம்பது ரூபா தொடக்கம் பதினைந்தாயிரத்து எழுநூற்று ஐம்பது ரூபா வரை மேலதிக வரி நிவாரணம் கிடைக்கவுள்ளதாகவும், இதன் மூலம் அரசாங்கத்தினால் வழங்கப்படும் மொத்த மாதாந்த வரி நிவாரணம் முப்பத்தாறாயிரத்து இருநூற்று ஐம்பது ரூபா வரை உயர்வடைவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
