Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

போதைப்பொருள் அற்ற சமூகத்தை உருவாக்க மீனவ மக்களின் ஒத்துழைப்பு அவசியம்

November 22, 2026

குத்தகை ஒப்பந்த நீடிப்பு விவகாரம்: அரசாங்கம் புதிய நிபந்தனைகளுடன் முன்னெடுக்க வேண்டும்!– இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் கோரிக்கை

November 22, 2026

ஹட்டன் தனியார் பேருந்து நிலைய கழிப்பறையில் கழிவு நீர் கசிவு; சுகாதார சீர்கேட்டால் மக்கள் விசனம்

November 22, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » குத்தகை ஒப்பந்த நீடிப்பு விவகாரம்: அரசாங்கம் புதிய நிபந்தனைகளுடன் முன்னெடுக்க வேண்டும்!– இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் கோரிக்கை
மலையகம்

குத்தகை ஒப்பந்த நீடிப்பு விவகாரம்: அரசாங்கம் புதிய நிபந்தனைகளுடன் முன்னெடுக்க வேண்டும்!– இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் கோரிக்கை

ThanaBy ThanaNovember 22, 2026No Comments4 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

குத்தகை ஒப்பந்த நீடிப்பு விவகாரம்: அரசாங்கம் புதிய நிபந்தனைகளுடன் முன்னெடுக்க வேண்டும்!– இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் கோரிக்கை –

 

பெருந்தோட்டங்களை மீண்டும் குத்தகைக்கு வழங்குமாறு கம்பனிகள் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு அரசாங்கம் புதிய நிபந்தனைகளுடன் முன்னெடுக்க வேண்டும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

பெருந்தோட்டப் பகுதிகளை கம்பனிகளுக்கு குத்தகை வழங்குவது குறித்து பாராளுமன்றத்தில் பல விவாதங்கள் கேள்விகள் எழுப்பட்டுள்ளன.

 

பெருந்தோட்டக் குத்தகை ஒப்பந்தங்களில் பின்வரும் நிபந்தனைகள் கட்டாயமாக உள்ளடக்கப்பட வேண்டும்.

 

1.தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகளை சுற்றியுள்ள 25 எக்டர் காணிகளை குத்தகைக்கு வழங்குவதை தவிர்த்து, குத்தகையையை புதுப்பிக்கும் போது அக்காணியை எதிர்காலத்தில் வீடமைப்பு திட்டம், தோட்ட புறங்களில் நவீன அபிவிருத்தி திட்டங்களுக்கு பயன்படுத்த கூடிய வகையில் குடியிருப்புடன் 25 எக்டர் காணியை பிரதேச செயலகத்தின் கீழ் கொண்டுவருவதற்கான வர்த்தமானியை அரசாங்கம் வெளியிட வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில், எதிர்கால அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க அரசாங்கம் கம்பனிகளின் அனுமதியை பெறவேண்டிய அவசியம் கிடையாது. மேலும் கோவில்,பாடசாலை, சிறுவர் பராமரிப்பு நிலையம், பாலர் பாடசாலை, வைத்திய சாலை, லயன் குடியிருப்புகள் ஆகியவற்றை தவிரத்து தான் குத்தகைக்கு வழங்க வேண்டும்.

 

2.குத்தகைத் தொகையை ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை மறுமதிப்பீடு செய்தல்

 

பெருந்தோட்டக் காணிகளை கம்பனிகளுக்கு குத்தகைக்கு வழங்கும்போது அறவிடப்படும் குத்தகைத் தொகையானது, தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் காணியின் சந்தை மதிப்பீட்டைக் கருத்திற்கொண்டு ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை மறுபரிசீலனை செய்யப்பட்டு அதிகரிக்க வேண்டும்.

 

3. தொழிலாளர்களின் சம்பளத்தை வருடாந்தம் அதிகரித்தல்

 

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை என்ற நடைமுறைக்குப் பதிலாக, ஒவ்வொரு வருடமும் அதிகரிக்கப்படக்கூடிய வகையில் குத்தகையுடன் புதிய ஏற்பாடு அறிமுகப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு செய்யும் போது அந்த அதிகரிப்பு என்பது கம்பனிக்கு அதிக சுமையாக இருக்காது, தொழிலாளர்களின் வாழ்வாதார சுமையும் குறைவடையும்.

 

3. சம்பள பேச்சுவார்த்தையை தற்போது தொழில் அமைச்சு தான் பேசுகிறது. காணிகளுக்கு அரசு சொந்தம் என்பதால் பெருந்தோட்ட அமைச்சும் சம்பள பேச்சுவார்த்தையில் எதிர்காலத்தில் பங்காக இருக்க வேண்டும் என்பதைக் குத்தகை ஒப்பந்தத்திற்குள் உள்ளடக்க வேண்டும்.

 

4. தோட்ட புறங்களில் இருக்கும் தரிசு நிலங்களில் உற்பத்தியை மேற்கொள்வதாக கம்பனிகள் குத்தகைக்கு எடுத்தனர்.ஆனால் அவர்கள் அதை முறையாக உற்பத்தி செய்யவில்லை. அவ்வாறு உற்பத்தி செய்யப்படாத பகுதிகளை அரசு மீண்டும் குத்தகைக்கு வழங்காமல், அந்த பகுதியை தோட்ட புறங்களில் இருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் செய்ய வழங்க வேண்டும்.

5. சம்பள நிர்ணயத்திற்கான புதிய அமைப்பை உருவாக்குதல்

 

தொழிலாளர்களின் வாழ்க்கைச் செலவு, வாழ்வாதாரத் செலவுகள், அன்றைய பொருளாதாரச் சூழ்நிலை, உலக சந்தியில் தேயிலை விற்பனையின் நிலவரம் மற்றும் பெருந்தோட்ட கம்பனிகளின் இலாபம் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு சம்பளத்தைத் தீர்மானிப்பதற்காக பெருந்தோட்ட அமைச்சை அதில் உள்ளடக்க வேண்டும்.

 

6. பெருந்தோட்ட பகுதிகளில் தேயிலையை விடுத்து, வருமான வரக்கூடிய நட்சத்திர விடுதிகள் போன்ற தொழில்களை முன்னெடுக்கும் இடங்களுக்கான குத்தகை தொகை தேயிலை காணியை விட அதிகமாக இருக்க வேண்டும் என செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

 

மேலும், பாராளுமன்றத்தில் தோட்டப்புறங்களை இ.தொ.கா கம்பனிக்கு குத்தகைக்கு வழங்கியதாக சுட்டிக்காட்டப்பட்டது. இ.தொ.கா தலைவர் என்ற வகையில் அதற்கு பதில் கூற வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது.

 

 

ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் நிலவிய கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் மலையக மக்களே அதிகம் பாதிக்கப்பட்டனர். உணவிற்கு வரிசை, சம்பளம் மாதம் தோறும் வழங்காமை, பசி பட்டினி மலையகத்தில் தலைவிரித்து ஆடியது. இலங்கையில் பசி பட்டினியால் அதிகம் பாதிக்கப்பட்ட காலப்பகுதியாக அந்த காலப்பகுதி வரலாற்றில் பதிவானது. இதனால் பாதிப்பு 1990 ஆம் ஆண்டு வரை நீடித்தது. JDB மற்றும் SLPC ஆகிய அரச தோட்டங்களை அரசாங்கத்தினால் தொடர்ந்து நிர்வகிப்பதில் சிரமங்கள் ஏற்பட்டன. சம்பளம் கூட வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் தோட்டப்புற காணிகளை தனியார் பெரும்பான்மை முதலாளிமார்களுக்கு வழங்குவதற்கான முயற்சிகள் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அதனை அன்று இருந்த பெரும்பான்மையான தொழிற்சங்கள் எதிர்த்து, பெரும்பான்மையான தொழிற்சங்களின் ஒப்புதலுடன் தனியார் கம்பனிகளுக்கு வழங்கும் குத்தகை முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

 

அன்று தோட்டபுற காணியை கம்பனிகளுக்கு குத்தகைக்கு வழங்காது, பெரும்பான்மை முதாலாளிமார்களுக்கு வழங்கியிருந்தால், தற்போது இருக்கும் தனியார் தோட்டங்களை போல், தோட்ட புறங்களில் உள்ள லயன் குடியிருப்புகள் முதல் கோயில் வரை அனைத்தும் தனிப்பட்ட நபர் ஒருவருக்கே சொந்தமாகியிருக்கும். தோட்டத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவு பிறப்பித்தால் கூட அதை சட்டரீதியாக அணுக முடியாத சூழ்நிலை ஏற்படும். இது அந்த தனிப்பட்ட நபருக்கே சாதகமாக மாறிவிடும்.

 

அதற்கு ஒரு சிறந்த உதாரணம் தான் கடந்த காலங்களில் இரத்தினபுரியில் இருந்த பாம் கார்டன் தோட்டத்தை அரசாங்கம் எடுத்தும் பெரும்பான்மை குடியேற்றத்தை குடியேற்ற முயன்ற போது, மறைந்த தலைவர் ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் அரசாங்கத்தில் இருந்த போதும், குத்தகை முறைமையை காண்பித்து, தான் வழக்கு தொடர்ந்து இதை இடைநிறுத்துவதாக அமைச்சரவையில் எச்சரித்து அந்த வேலைத்திட்டம் கைவிடப்பட்டது.

 

 

 

மேலும் 2009 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலங்களில் வரை அரசாகத்தின் வரவுசெலவு திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு பெரும்பாலான நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கான காரணம் இலங்கையில் இடம்பெற்ற யுத்தம். அப்போது அபிவிருத்தியை விட பாதுகாப்பிற்காக அதிக நிதி வழங்கப்பட்டது. ஆனால் தற்போது பாதுகாப்பிற்காக நிதி குறைக்கப்பட்டு அபிவிருத்தி, கல்விக்காக அதிக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் காலத்திற்கு ஏற்ற தேவையாகும். அன்று தோட்டங்களை கம்பனிக்கு குத்தகைக்கு வழங்கியதும் இன்று சட்ட மூலம் உருவாக்குவதும் காலத்திற்கு ஏற்ற தேவையாகும். அன்று கம்பனிக்கு குத்தகைக்கு வழங்காது பெரும்பான்மை முதாலாளிமார்களுக்கு வழங்கியிருந்தால் இன்று தோட்டத்தில் பணிப்புறிபவரைகளை தவிர அனைவரும் தோட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டிருப்பார்கள் அதற்கு சிறந்த உதாரணம் இன்று பல தனியார் தோட்டங்களில் அவ்வாறான நிலைமைகள் காணப்படுகின்றன. இதற்கு சட்ட ரீதியாக அணுகினால் கூட தனியாருக்கே சாதகமான தீர்ப்பு கடந்த காலங்களில் வழங்கப்பட்டுள்ளது. எனவே,அரசாங்கம் கம்பனிகளுக்கு பெருந்தோட்ட காணிகளை இந்த நிபந்தனைகளுடன் குத்தகைக்கு வழங்ககினால் அது காலத்திற்கு ஏற்ற தேவையாக அமையும் என எதிர்பார்ப்பதாக செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஹட்டன் தனியார் பேருந்து நிலைய கழிப்பறையில் கழிவு நீர் கசிவு; சுகாதார சீர்கேட்டால் மக்கள் விசனம்

    November 22, 2026

    நுவரெலியா மாவட்டத்தின் பிரதான வீதிகளில் அபாயகரமான பகுதிகளில் பாதுகாப்பு வேலிகள் அமைப்பு 

    November 22, 2026

    கொட்டகலையில் வளர்ப்பு மற்றும் தெருநாய்களுக்கு இலவச வெறிநாய்க்கடி தடுப்பூசி!

    November 22, 2026

    மத்திய மாகாண சோட்டோகான் கராத்தே கியு தரத் தேர்வு மற்றும் ‘The Scientific Art of Karate’ நூல் வெளியீடு நவம்பர் 29இல்

    November 22, 2026
    Editors Picks

    போதைப்பொருள் அற்ற சமூகத்தை உருவாக்க மீனவ மக்களின் ஒத்துழைப்பு அவசியம்

    November 22, 2026

    குத்தகை ஒப்பந்த நீடிப்பு விவகாரம்: அரசாங்கம் புதிய நிபந்தனைகளுடன் முன்னெடுக்க வேண்டும்!– இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் கோரிக்கை

    November 22, 2026

    ஹட்டன் தனியார் பேருந்து நிலைய கழிப்பறையில் கழிவு நீர் கசிவு; சுகாதார சீர்கேட்டால் மக்கள் விசனம்

    November 22, 2026

    நுவரெலியா மாவட்டத்தின் பிரதான வீதிகளில் அபாயகரமான பகுதிகளில் பாதுகாப்பு வேலிகள் அமைப்பு 

    November 22, 2026

    போதைப்பொருள் அற்ற சமூகத்தை உருவாக்க மீனவ மக்களின் ஒத்துழைப்பு அவசியம்

    November 22, 2026

    குத்தகை ஒப்பந்த நீடிப்பு விவகாரம்: அரசாங்கம் புதிய நிபந்தனைகளுடன் முன்னெடுக்க வேண்டும்!– இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் கோரிக்கை

    November 22, 2026

    ஹட்டன் தனியார் பேருந்து நிலைய கழிப்பறையில் கழிவு நீர் கசிவு; சுகாதார சீர்கேட்டால் மக்கள் விசனம்

    November 22, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.