கொட்டகலை மற்றும் தலவாக்கலைப் பகுதிகளில் வளர்ப்பு மற்றும் தெருநாய்களுக்கு இலவச வெறிநாய்க்கடி தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் வெறிநாய்க்கடி தடுப்புப் பிரிவு அதிகாரிகளுடன் இணைந்து, கொட்டகலை மற்றும் தலவாக்கலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ள தோட்டப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் இந்தத் தடுப்பூசி வழங்கப்படுகிறது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் நிர்வாக சுகாதார வைத்திய அதிகாரி எம். தேவன், இந்த வேலைத்திட்டத்திற்குத் தோட்டத் தொழிலாளர்களும் கிராமப்புற மக்களும் மிகுந்த ஆர்வத்துடன் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகக் குறிப்பிட்டார்.
