பசறை கோணக்கலை ரேந்தபல பிரிவில் நேற்று முன்தினம் (07) பதினெட்டு வயது மகனை சவரம் செய்யும் கத்தியால் வெட்டிய தந்தை பசறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் பதுளை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரிவதாவது.
தந்தை மதுபோதையில் தாயிடம் தகாத வார்த்தைகளைப் பேசியதோடு
தகராறில் ஈடுபட்டுள்ளதாகவும் இதனை மகன்மார் தடுக்க முற்பட்ட வேளையில் இச்சம்பவம் நடைபெற்றதாகவும் பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
தந்தையினால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த மகன் பசறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை அரசினர் வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு கண்டி பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.