இத்தாலியில் தொழில் வேலை வாய்ப்புக்கு இணையவழி ஊடாக விண்ணப்பிப்பது குறித்து இத்தாலியில் உள்ள இலங்கைத் தூதுவர் ஜகத் வெள்ளவத்த 2023.03.07 ஆம் திகதி இலங்கை வெளிநாட்டு வேலைவாப்புப் பணியகத்திற்கு விடுத்துள்ள அறிக்கையில் பின்வரும் விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக பணியகம் அறிவித்துள்ளது.
அதன்படி, இலங்கை உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் அல்லாத நாடுகளுக்கு இத்தாலிய அரசாங்கத்தினால் வருடாந்தம் வழங்கப்படுகின்ற கோட்டா முறையின் கீழ் வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்காக, இத்தாலியில் உள்ள வேலை வழங்குபவர்களின் ஊடாக அல்லது வணிக நிறுவனங்களின் ஊடாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக இலங்கையர்கள் நேரடியாக விண்ணப்பக்க முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே இந்த தொழில் வாய்ப்புக்களுக்காக இலங்கையில் இருந்து நேரடியாக விண்ணப்பிக்க முடியாது. இதற்காக , எந்தவொரு நபருக்கும் பணம் வழங்குவதை தவிர்த்துக் கொள்ளுமாறு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.