இலங்கையில் அடையாளம் காணப்பட்ட சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாக சிறுநீரக வைத்தியர் அனுர ஹேவகீகன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.விவசாய பிரதேசங்களில் பதிவாகும் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், விவசாய உற்பத்திகளுக்கு பயன்டுத்தப்படும் இரசாயனங்களே இதற்கான காரணம் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.