வடமேல் மாகாணம்- புத்தளம் மாவட்டம், புத்தளம் (மணல்தீவு) சேகுவந்தீவு அருள்மிகு ஸ்ரீ முருகன் திருக்கோயில்

வருவான் அருள் வான் முருகன்
நம்பித் தொழுவோர் நலன் காப்பான்
துன்பங்களைத் துடைத்தெறிவான் என்றும்
அவன் சேகுவந் தீவிலுறை எங்கள் வேல்முருகன்

அரவணைப்பான் ஆறுதலும் தான் தருவான் முருகன்
தேடிப்பணிவோர் துயர் களைவான்
மானம் காப்பான் என்றும்
அவன் சேகுவந்தீவிலுறை எங்கள் வேல்முருகன்

நன்மைகள் செய்வான் தீமைகள் தடுப்பான் முருகன்
அடிபணிந்து பணிவோரின் குலம் காப்பான்
குறைகளை நிறைவு செய்வான் என்றும்
அவன் சேகுவந்தீவிலுறை எங்கள் வேல்முருகன்
ஆறுதல் தருவான் ஆற்றலையும் தான் தருவான் முருகன்
அன்பு கொண்டோர் உள்ளங்களில் உறைந்த்திருப்பான்
தீயபகை கொடுமைகளைத் தடுத்திடுவான் என்றும்
அவன் சேகுவந்தீவிலுறை எங்கள் வேல்முருகன்
துணையிருப்பான், தூயவழி தருவான் முருகன்
போற்றித் தொழுவோரின் புகழை உயர்த்திடுவான்
நோய் நொடிகள் நெருங்காது காத்திடுவான் என்றும்
அவன் சேகுவந்தீவிலுறை எங்கள் வேல்முருகன்
வேல்கொண்டு வந்திடுவான் வேதனைகள் போக்கிடுவான் முருகன்
உள்ளத்தில் உள்ளிருத்தி உணர்வோடு தொழுபவரின் உடனிருப்பான்
மதி தருவான், நல்வளங்களும் தான் தருவான் என்றும்
அவன் சேகுவந்தீவிலுறை எங்கள் வேல்முருகன்.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.
