தென்மாகாணம்- காலி மாவட்டம்- காலி மாநகரம், அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்

மீனாட்சி அம்மையுடன் வீற்றிருக்கும் சிவனே
மீட்சி தந்து ஆட்சி செய்ய வரவேண்டும் ஐயா
கேட்கும் வரம் தந்தெமக்கு நல்வாழ்வைத் தருவாய்
காலிமாநகர் கோயில் கொண்ட சுந்தரேசுவரப் பெருமானே அருள்வாய்

தென்னிலங்கைக் கரையினிலே காட்சி தரும் சிவனே
தெளிவான மனநிலையை உறுதிசெய்ய வரவேண்டும் ஐயா
தொல்லையில்லா நல்வாழ்வை எமக்கென்றும் தருவாய்
காலிமாநகர் கோயில் கொண்ட சுந்தரேசுவரப் பெருமானே அருள்வாய்

அழகுமிகு திருக்கோயில் கொண்டுறையும் சிவனே
அச்சமில்லா நிம்மதியைத் தர வரவேண்டும் ஐயா
அரவணைப்பைத் தந்தெமக்கு நல்வாழ்வைத் தருவாய்
காலிமாநகர் கோயில் கொண்ட சுந்தரேசுவரப் பெருமானே அருள்வாய்
தமிழ் வளர்த்த பாண்டியரின் இலச்சினையை கொண்டவனே சிவனே
தளர்வில்லா மனவுறுதி தர வரவேண்டும் ஐயா
திடமான மனநிலையைத் தந்தெமக்கு நல்வாழ்வைத் தருவாய்
காலிமாநகர் கோயில் கொண்ட சுந்தரேசுவரப் பெருமானே அருள்வாய்
தக்கனின் கொட்டத்தை அடக்கி அருள் செய்த சிவனே
தவறில்லா வாழ்வு தர வரவேண்டும் ஐயா
துணிவு தந்தெமக்கு நல்வாழ்வைத் தருவாய்
காலிமாநகர் கோயில் கொண்ட சுந்தரேசுவரப் பெருமானே அருள்வாய்
அருவுருவாய் ரூபமாய் அதற்கப் புறத்திலுமாயுள்ள சிவனே
அஞ்சாத வாழ்வு தர வரவேண்டும் ஐயா
நெஞ்சம் நிமிர்ந்து நிற்கும் நல்வாழ்வைத் தருவாய்
காலிமாநகர் கோயில் கொண்ட சுந்தரேசுவரப் பெருமானே அருள்வாய்.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.
