வெல்லவாய – எல்லாவல நீர் வீழ்ச்சியில் நீராடச் சென்ற நிலையில் காணாமல்போன நான்கு இளைஞர்களும் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு ஒருவருடைய சடலமும், இன்று காலை ஏனைய மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக வெல்லவாய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்முனை, சம்மாந்துறை மற்றும் சாய்ந்தமருது ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 20 வயதுக்கும் 23 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர்களே இவ்வாறு நீராடச் சென்ற போது காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ராமு தனராஜா
