லிந்துலை ,சென்றெகுலர்ஸ் மற்றும் கிளனிஈகல்ஸ் ஆகிய தோட்டங்களில் நேற்று (22/03/23) கடும் காற்றுடன் பெய்த மழைக் காரணமாக பாதிக்கப்பட்ட 133 குடும்பங்களை சேர்ந்த 182 பேர் தற்காலிகமாக பாடசாலை மண்டபங்களிலும் ,உறவினர்களின் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்க பட்ட குடும்பங்களில் 5 வயதுக்கும் குறைவான 45 சிறுவர்களும் உள்ளடங்குவதாக,லிந்துலை சுகாதர வைத்திய அதிகாரி திருமதி ரேஷினி துரைராஜா தெரிவித்தார்.பாதிக்கப்பட்ட மக்களை இன்று சந்தித்த அவர் அவர்களுக்கு தேவையான சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்பார்வை செய்தார்.மேலும் அவர் எங்கள் செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கையில் தோட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்துவருவதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கான கூரைகளை முழுமையாக சீர் செய்ததும் அவர்கள் தங்களின் வீடுகளுக்கு செல்லமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

