ஹொரணை குருகொட வீதியில் சமுர்த்தி வங்கியை அண்மித்த பகுதியில் அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் எதிரே வந்த காருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று(30) மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் பின்னால் அமர்ந்து பயணித்தவர் 30 அடி தூரத்துக்கு தூக்கி எறியப்பட்டு வீதியோரத்திலிருந்த கடையின் கூரையில் கிடந்துள்ளார்.
விபத்தை அடுத்து அவ்விடத்துக்கு வருகைதந்த தீயணைப்புப் படை வீரர்கள் கூரையில் கிடந்தவரை பாதுகாப்பாக கீழே இறக்கி ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்க பிரதேசவாசிகள் நடவடிக்கை எடுத்தனர்.

மோட்டார்சைக்கிளின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாது போனதன் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்துள்ளதென கூறப்படுகிறது.
