மன்னாரில் கேரள கஞ்சாவுடன் இரண்டு பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் முன்னெடுத்த சோதனையில் மன்னார் மற்றும் தலைமன்னார் பிரதான வீதி ஆகிய இடங்களில் குறித்த இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்
இதன்போது, அவர்களிடம் இருந்து 16 கிலோ கிராமுக்கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளது.
