அரசாங்கத்தினால் வழங்கப்படும் அரிசியை பொதுமக்களுக்கு விநியோகிக்கும் ஆரம்பகட்ட நிகழ்வு நேற்று (01) அம்பகமுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புளியாவத்தை நகர மண்டபத்தில் இடம்பெற்றது.
அம்பகமுவ பிரதேச செயலகத்தின் நோர்வூட் சமுர்த்தி வங்கியின் கீழ் 319/m டில்லரி 319 / L இன்ஜஸ்றி ஆகிய பிரிவுகளுக்கான அரிசி தொகை நேற்று விநியோகிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அம்பகமுவ பிரதேச செயலகத்தின் அபிவிருத்திக் குழு தலைவருமான எம்.ராமேஸ்வரன் மற்றும் பிரதேச செயலாளர் ருபினி சித்தார கமகே, நோர்வூட் சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் கனகசுந்தரம், டில்லரி மற்றும் இன்ஜஸ்றி பிரிவுக்கு பொறுப்பான நிஷாரியஸ் கிராம உத்தியோகத்தர்களும் கலந்து கொன்டனர்.
