14 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 3 தமிழ் அரசியல் கைதிகள் வவுனியா மேல் நீதிமன்றத்தினால் இன்று (3) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்
2009ஆம் ஆண்டு மே கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் இருந்த இந்த மூவரே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்
இந்த நிலையில் குறித்த மூவருக்கும் எதிரான குற்றச்சாட்டுகள் நிரூப்பிக்கப்படாத நிலையில், அவர்களை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுலைசெய்யுமாறு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசம் இளஞ்செழியன் உத்தரவிட்டார்.
கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்து விளக்கமறியலிலும், தடுப்பு காவலிலும் வைக்கப்பட்டிருந்த திருவருள் (45), சுலக்சன் (34), மற்றும் தர்சன்(33) ஆகியோரே வவுனியா மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அரசாங்கத்திற்கு எதிராக சதித் திட்டம் தீட்டியதாக இவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.