வடமாகாணம்- வவுனியா மாவட்டம் வவுனியா, பெரியதம்பனை, அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் திருக்கோயில்

வரம் தந்து வாழ்த்தி வழிநடத்தும் சித்திவிநாயகரே
வரும் நன்மை நமையடைய வழிதிறந்து விட்டிடைய்யா
உன்கருணை எமக்கென்றும் உரித்தாக வேண்டுமைய்யா
பெரியதம்பனை இருந்தருளும் வரசித்தி விநாயகரே

வரம் கேட்டு வரும் அடியார் நலன்காக்கும் சித்திவிநாயகரே
வரும் தீமை தடுத்தெமக்கு நல்ல வழிதிறந்திடைய்யா
உன்னருளால் நாமென்றும் உயர்வடைய வேண்டுமைய்யா
பெரியதம்பனை இருந்தருளும் வரசித்தி விநாயகரே
வெற்றி யென்றும் எமக்கருளும் சித்திவிநாயகரே
வேதனைகள் போக்கி சுகவழியைக் காட்டிடைய்யா
உன்கருணை என்றுமெம்மைக் காத்தருள வேண்டுமைய்யா
பெரியதம்பனை இருந்தருளும் வரசித்தி விநாயகரே
நல்ல வழி காட்டி யெம்மை வழி நடத்தும் சித்திவிநாயகரே
நம்பிக்கை கொண்டென்றும் வாழும் வழி தந்திடைய்யா
உன்காப்பு என்றுமெம்மைக் காத்தருள வேண்டுமைய்யா
பெரியதம்பனை இருந்தருளும் வரசித்தி விநாயகரே
எங்கும் உறைந்திருந்து உறுதுணையாயிருக்கும் சித்திவிநாயகரே
வாழும் நல்ல வழிதிறந்து வழியமைத்து விட்டிடைய்யா
உன் ஆசியென்றும் எமை வாழவைக்க வேண்டுமைய்யா
பெரியதம்பனை இருந்தருளும் வரசித்தி விநாயகரே
வன்னிப் பெருநிலத்தில் வந்துறையும் சித்திவிநாயகரே
வரலாற்றில் நம்நிலையை உறுதிபட உயர்த்திடைய்யா
உன்பார்வை என்றென்றும் எம்மீது வேண்டுமைய்யா
பெரியதம்பனை இருந்தருளும் வரசித்தி விநாயகரே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.
