2023 ஐ.சி.சி. மகளிர் டி:20 உலகக் கிண்ணத்துக்குப் பின்னர் தலைவர் பதவியிலிருந்து விலகிய பிஸ்மா மரூப்க்குப் பதிலாகப் பாகிஸ்தான் புதிய தலைவரை நியமித்துள்ளது.
அதற்கமைவாக அணியின் முன்னணி சகலதுறை வீராங்கனை நிடா டார் பாகிஸ்தான் மகளிர் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
130 டி-20 மற்றும் 99 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய நிடா டார், பாகிஸ்தான் அணியில் மிகவும் அனுபவம் வாய்ந்த வீராங்கனைகளில் ஒருவராவார்.
இதேவேளை மார்க் கோல்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராகவும் நியமிக்கப்படவுள்ளார்.
முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீராங்கனை சலீம் ஜாபர், மகளிர் கிரிக்கெட் தேர்வுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
