நீராட சென்ற இருவரை காணவில்லை
பலாங்கொடை வெளிஅரனாவ நீர் தாங்கிக்கு அருகாமையில் இருக்கும் வளவ கங்கையில் நேற்று(11) மாலை நீராடச் சென்ற இரண்டு இளைஞர்களை காணாவில்லை இவ்வாறு காணாமல் போன இருவரும் 15, மற்றும் 17 வயதுடைய இளைஞர்கள் ஆவார்கள்.
ஒருவர் பலாங்கொடை எல்லராவ பகுதியும் மற்ற இளைஞன் செக்னோல் வீதி பெங்ஙிவத்த பகுதியை சேர்ந்தவர் என பலாங்கொடை காவற்துறையினர் தெரிவித்தனர் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதோடு மேலதிக விசாரணைகளை பலாங்கொடை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
