ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைகழகத்தின் ஏற்பாட்டில் இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையில் கடந்த 25/11/2022 நடத்தப்பட்ட செய்தி முன்வைப்பு போட்டியில் தமிழ் மொழிப் பிரிவில்
பங்குப் பற்றிய பொகவந்தலாவையை சேர்ந்த ஸ்ரீதரன் பானுஜாஸ்ரீனி முதலாமிடத்தைப் பெற்றுக்கொண்டார்.இவர் முன்னாள் பொகவந்தலாவை சென்மேரிஸ் பாடசாலை ,மற்றும் நாவலபிட்டிய இந்து மத்திய கல்லூரியின் பழைய மாணவியும் ஆவார், தற்போது அவர் வயம்ப பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பீடத்தில் கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அவரை மலையகம் .lk வாழ்த்துகின்றது.