2023 ஆம் ஆண்டு சித்திரை புத்தாண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட கோணக்கலை பிரிமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டி பசறை கோணக்கலை தமிழ் மகா வித்தியாலய விளையாட்டு திடலில் கடந்த 14,15, 16 ஆகிய திகதிகளில் நடைபெற்றது. இத்தொடரில் கோணக்கலை பெருந்தோட்டப்பிரிவுகளைச்
20 அணிகள் கலந்துகொண்டு மோதின.

கோணக்கலை மேற்பிரிவு இளங்கதிர் அணி – ரேந்தபல R.C.C அணியினர்க்கிடையே நடைபெற்ற இறுதிப்போட்டியில் ரேந்தபல R.C.C அணி வெற்றியடைந்து வெற்றிக்கிண்ணத்தை சவீகரித்தது.

இரண்டாம் இடத்தை இளங்கதிர் அணியினரும் மூன்றாவது இடத்தை கோணக்கலை தமிழ் மகா வித்தியாலய அணியினரும் பெற்றுக்கொண்டனர்.
போட்டித் தொடரின் சிறந்த வீரராக ஜஸ்டீன் தெரிவானார். போட்டித் தொடரின் சிறந்த பந்துவீச்சாளராக அருள் மற்றும் சிறந்த துடுப்பாட்ட வீரராக சஞ்சீவன் ஆகியோரும் சிக்ஸர் ஹிட்மேனாக பாலமுருகனும் தெரிவுசெய்யப்பட்டு பரிசில்கள் வழங்கி பாராட்டப்பட்டனர்.
நடராஜா மலர்வேந்தன்
