கடந்த வருடம் மே மாதம் 9ஆம் திகதி பஞ்சிகாவத்த பிரதேசத்தில் பொலிஸ் ஜீப்பொன்றுக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்ற விசாரணைப் பிரிவின் வணிக குற்ற விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்க அமைய சந்தேநகபர்கள் மூவரும் கைதசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மூவரும் 18, 31, 46 வயதானவர்கள் என்பதுடன், இவர்கள் மாளிகாவத்த மற்றும் கொழும்பு 12 பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களை இன்றைய தினம் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
