இலங்கை தேசிய வொலிபோல் அணியில் இடம் பிடிக்கும் மேமலை தோட்டத்தின் முதல் யுவதியாக ஜெயராம் திலக்ஷனா இடம் பிடிக்கிறார்.
அடுத்த மாதம் நேபாள நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை தேசிய பெண்கள் வொலிபோல் குழாமில் அவர் இடம்பிடித்துள்ளார்.
மேமலை தமிழ் வித்தியாலயத்தில் விளையாட்டு வாழ்க்கையை ஆரம்பித்த அவர் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தேசிய வொலிபோல் குழாமில் பயிற்சிகளை நிறைவு செய்து தற்போது இலங்கை கடற்படை பெண் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
