எம்பிலிபிட்டிய – குட்டிகல பகுதியில் வீதியில் கைவிடப்பட்டிருந்த ஐந்து வயது சிறுவன் ஒருவனை பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த சிறுவனிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின்போது,
குட்டிகல பிரதேசத்தைச் சேர்ந்த, குறித்த சிறுவனை முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்ற, அவரது தாய் மற்றும் மாற்றாந்தந்தை ஆகியோர் நெடுஞ்சாலையில் விட்டுச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், தாய் அந்த சிறுவனை அடித்து காயப்படுத்தியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிகிச்சைக்காக எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சட்ட வைத்தியரிடமும் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
மேலும், சிறுவனின் தாய் தனது கணவனை விட்டு பிரிந்து மறுமணம் செய்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
