யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்று (22) வெட்டுக் காயங்களுடன் சடலங்களாக மீட்கப்பட்ட ஐந்து பேரின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பிரித்தானிய பிரஜாவுரிமை பெற்ற 78 வயதான வேலாயுதம்பிள்ளை நாகேந்திர ரத்தினம், யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களான 82 வயதான நாகநதி பாலசிங்கம் , 76 வயதான பாலசிங்கம் கண்மணிப்பிள்ளை, 83 வயதான கார்த்திகேசு நாகேஸ்வரி, 75 வயதான மகாதேவன் என்பவர்களே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த 100 வயதான கனகம் பூரணம் என்ற மூதாட்டி யாழ். போதனா வைத்தியசாலையில் சிசிக்சை பெற்று வருகிறார்.
ஒருவர் கைது..
நெடுந்தீவில் இடம்பெற்ற படுகொலை சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் புங்குடுதீவு பகுதியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜெர்மனியில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
