மத்திய மாகாணம்- மாத்தளை மாவட்டம், மாத்தளை, வெள்ளைக்கல் அருள்மிகு அழகர் திருக்கோயில்

மலைசூழ்ந்த பெரு நிலத்தில் இருந்தருளும் பெருமாளே
மலைப்பில்லா நல்வாழ்வை எமக்கருள வேண்டுமைய்யா
என்றும் உடனிருந்து எமக்கருள வேண்டும்
வெள்ளைக்கல் கோயில் கொண்ட பேரழகர் பெருமாளே

நம்பிவந்து உனைப் பணிவோர் உடனிருக்கும் பெருமாளே
நலம் கொண்ட பெருவாழ்வை எமக்கருள வேண்டுமைய்யா
என்றும் உடனிருந்து நிம்மதியை அருள வேண்டும்
வெள்ளைக்கல் கோயில் கொண்ட பேரழகர் பெருமாளே

அன்னை மீனாட்சியின் உடன்பிறந்த பெருமாளே
அமைதி மிகு நல்வாழ்வை எமக்கருள வேண்டுமைய்யா
என்றும் உடனிருந்து அரவணைத்தருள வேண்டும்
வெள்ளைக்கல் கோயில் கொண்ட பேரழகர் பெருமாளே
காவலாயிருந் தெம்மைக் காத்தருளும் பெருமாளே
கவலையில்லா நல்வாழ்வை எமக்கருள வேண்டுமைய்யா
என்றும் உடனிருந்து ஆறுதலை தந்தருள வேண்டும்
வெள்ளைக்கல் கோயில் கொண்ட பேரழகர் பெருமாளே
பாவங்கள் களைந்தெம்மை ஆளுகின்ற பெருமாளே
பார்போற்றும் உயர்வாழ்வை எமக்கருள வேண்டுமைய்யா
என்றும் உடனிருந்து வழிகாட்ட வேண்டும்
வெள்ளைக்கல் கோயில் கொண்ட பேரழகர் பெருமாளே
போற்றி நிற்போர் உள்ளங்களில் உறைகின்ற பெருமாளே
முன்னேற்ற வழிகாட்டி எமக்கருள வேண்டுமைய்யா
என்றும் உடனிருந்து வாழ்த்தி வழிகாட்ட வேண்டும்
வெள்ளைக்கல் கோயில் கொண்ட பேரழகர் பெருமாளே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.
